fbpx

#BYOBclean என்றால் என்ன?

#BYOBclean என்பது சிங்கப்பூரிலுள்ள அனைத்து வீடுகளுக்கும் இலவசக் கை சுத்திகரிப்பானைத் தயார்ப்படுத்தி விநியோகிக்கும் ஒரு முனைப்பாகும். நம் சமூகம் பாதுகாப்பாகவும் ஆரோக்கியமாகவும் இருப்பதற்கு இம்முனைப்பு உதவுகிறது. ஒவ்வொரு வீட்டிற்கும் அதிகபட்சம் 500மி.லி. கை சுத்திகரிப்பான் பெற்றுக்கொள்ளலாம்.

ஆல்கஹால் கலக்கப்படாத #BYOBclean கை சுத்திகரிப்பானில் 0.054% பென்சல்கொனியம் குளோரைட் உள்ளது. இது கொரோனா கிருமி போன்ற கிருமிகளைச் செயலிழக்கச் செய்யும். இது நச்சுத்தன்மை இல்லாதது, தீப்பற்றாதது, அரித்து சிதைக்காதது, எரிச்சலோ கறையோ உண்டாக்காதது, சுற்றுப்புறத்தைப் பாதிக்காமல் மக்கக்கூடியது.

சவர்க்காரமும் தண்ணீரும் இல்லாதபோது, நாம் கை சுத்திகரிப்பானைப் பயன்படுத்தி கைகளைச் சுத்தம் செய்யலாம். இதன்வழி, மற்றவர்களுக்கும் நமக்கும் கிருமிகளும் நுண்ணுயிரிகளும் பரவாமல் தடுக்கலாம்.

உங்களுக்கான இலவசக் கை சுத்திகரிப்பானைப் பெற்றுக்கொள்ள, உங்களது சொந்த போத்தலை எடுத்துச்சென்றால் போதும்

எப்படி பெற்றுக்கொள்வது

சிங்கப்பூரிலுள்ள எல்லா வீடுகளுக்கும் தபால் பெட்டியில் #BYOBclean துண்டுப்பிரசுரம் கிடைத்திருக்கும்

உங்கள் துண்டுப்பிரசுரத்தை வைத்துக்கொள்ளவும்.

உங்கள் கை சுத்திகரிப்பானைப் பெற அதை உங்களுடன் கொண்டு வாருங்கள்.

உங்களுக்காக ஒதுக்கப்பட்ட நாளில், இவற்றை எடுத்து வரவும்:

உங்கள் துண்டுப்பிரசுரம்

லேபிள் அகற்றப்பட்ட, 500 மி.லி அல்லது அதற்கு மேற்றப்பட்ட கொள்ளளவு கொண்ட தூய்மையான போத்தல்(கள்)

இவ்விரு பொருட்களையும் ஏதேனும் ஒரு விநியோக நிலையத்திற்கு நீங்கள் எடுத்துச்செல்லவேண்டும்.

உங்களுக்காக வழங்குவோர்

#BYOBclean முனைப்புக்கு ஆதரவளிக்கும் எங்கள் பங்களிப்பாளர்கள் அனைவரையும் மனதாரப் பாராட்டுகிறோம்.
மார்ச் 30 முதல் ஏப்ரல் 5 வரை, 10 கெபிட்டாலாண்ட் கடைத்தொகுதிகளிலிருந்து உங்கள் கை சுத்திகரிப்பானை பெற்றுக்கொள்ளாம். கடைத்தொகுதிகளின் முகவரிக்கு கிளிக் செய்யவும்.

Pin It on Pinterest

Share This
உங்களுக்கு ஏதேனும் உதவி தேவைப்பட்டால், 1800 738 2000 என்ற தொலைபேசி எண்ணை அழைக்கவும் (16 மார்ச் – 5 ஏப்ரல் 2020)