Stay Prepared திட்டம், பெரிய விபத்துகள், இயற்கைப் பேரிடர்கள், உலகம்பரவும் நோய்கள், மோசமான புகைமூட்டம் அல்லது பயங்கரவாதத் தாக்குதல் போன்ற நெருக்கடிநிலைகளுக்கு சிங்கப்பூர் சமூகத்தைத் தயாரிப்படுத்த உதவுகிறது. தெமாசெக் அறநிறுவனம் நிர்வகிக்கும் தெமாசெக் அவசரகாலத் தயார்நிலை நிதி இதற்கு ஆதரவளிக்கிறது.

Stay Prepared திட்டம், பின்வரும் வகையான முனைப்புகளைச் செயல்படுத்துகிறது:

  • பல்வேறு வகையான அவசரநிலைகளுக்கு சிங்கப்பூர் மக்களைத் தயார்ப்படுத்த உதவுதல்
  • நீண்டகால ஆற்றலை வளர்ப்பதோடு, அவசரநிலைகளில் உதவி வழங்குதல்
  • அவசரகாலத் தயார்நிலையை அடைய தேசிய முனைப்புகளுக்குத் துணைநின்று, தனியார் துறை, தொண்டூழிய சமூகநல அமைப்புகள், சமூகக் குழுக்கள் ஆகியவற்றுடன் ஒத்துழைப்பை மேம்படுத்துதல்

சிங்கப்பூரிலும் அதற்கு அப்பாலும் வாழ்க்கையையும் சமூகத்தையும் சீர்தூக்கிவிடும் திட்டங்களுக்கு தெமாசெக் அறநிறுவனம் ஆதரவளிக்கிறது. சமூக மீள்திறனை வலுவாக்கி, அனைத்துலக பரிமாற்றத்தை வளர்த்து, வட்டார ஆற்றல்களை மேம்படுத்தி, நீடித்து நிலைக்கத்தக்க உலகுக்காக அறிவியலையும் இயற்கையையும் முன்னேற்றுவது எங்களின் இலக்கு.