கை சுத்திகரிப்பான் பற்றி

கை சுத்திகரிப்பானில் பென்சல்கொனியம் குளோரைட் (0.054%), பாலிமரிக் பைகுவனைட் ஹைட்ரோகுளோரைட் (0.004%) உள்ளன. பென்சல்கொனியம் குளோரைட் 0.05% இருப்பதால், கொரோனா கிருமிகள் உள்ளிட்ட கிருமிகளை அழிக்கவல்லது.

இந்தக் கை சுத்திகரிப்பான் சுற்றுப்புறத்தைப் பாதிக்காமல் மக்கக்கூடியது. தண்ணீரை அடிப்படையாகக் கொண்ட இந்தத் திரவத்தில் ஆல்கஹால் கிடையாது. இது தீப்பற்றாதது, நச்சுத்தன்மை இல்லாதது, அரித்து சிதைக்காதது.

உங்கள் சருமத்திற்குப் பாதுகாப்பான கிருமிநாசினி இது.

பிள்ளைகளின் கைக்கு எட்டாமல் வைத்திருக்கவேண்டும்.

கண்களில், மூக்கில் அல்லது வாயில் பயன்படுத்தக்கூடாது. இதனைக் குடிக்கக்கூடாது.

இதனை அடிக்கடி பயன்படுத்துவதால் அரிப்பு அல்லது ஒவ்வாமை ஏற்பட்டால், பயன்படுத்துவதை நிறுத்திவிட்டு, தேவையாயின் மருத்துவரைச் சென்று பார்க்கவும்.

உங்கள் கைகள் முழுவதும் தேய்ப்பதற்குப் போதுமான அளவு சுத்திகரிப்பானைத் தெளிக்கவும் அல்லது ஊற்றவும். கைகள் உலர்வாகும் வரை, குறைந்தது 20 விநாடிகளுக்குத் தேய்த்து, அப்படியே விட்டுவைக்கவும்.

கை சுத்திகரிப்பான் மறுபயனீட்டு போத்தலில் நிரப்பப்படுவதால், 6 மாதங்களுக்குள் பயன்படுத்தி முடிப்பது நல்லது.

உங்கள் போத்தல் எவ்வளவு சுத்தமாக இருக்கிறதோ, அந்த அளவுக்குக் கை சுத்திகரிப்பான் கூடுதல் காலம் பயனளிக்கும். அழுக்கான போத்தல்கள் கை சுத்திகரிப்பானின் பயனையும் பயன்பாட்டுக் காலத்தையும் குறைத்துவிடும். 

வணிக ரீதியில் தயாரிக்கப்படும் கை சுத்திகரிப்பான் போத்தல்கள் பொதுவாகக் குறைந்தது 4 ஆண்டுகளுக்குப் பயன்படுத்தக்கூடிய நிலையில் இருக்கும்.

உங்களுக்குத் தேவைப்படாதபோது, போத்தலை காலிசெய்து, மறுசுழற்சி செய்யவும்.

வீடு திரும்பியவுடன், போத்தலைப் பாதுகாப்பான இடத்தில் பத்திரப்படுத்தி வைக்கவேண்டும்.
  • பிள்ளைகளின் கைக்கு எட்டாத இடத்தில் வைக்கவும்
  • பானங்கள் அல்லது மற்ற வகையான வீட்டுத் திரவங்கள் இருக்கும் இடத்தில் கலந்து வைக்கக்கூடாது
  • குளுமையான, உலர்வான இடத்தில் வைக்கவும்

இந்தக் கை சுத்திகரிப்பான் தேசிய இருப்பிலிருந்து எடுக்கப்படவில்லை.

போத்தல்கள்

நீங்கள் கொண்டு வரக்கூடியவை:
  • காற்றழுத்த விசையுள்ள ஷாம்பூ / திரவ சவர்க்கார போத்தல்கள் அல்லது
  • ஒழுகாத மூடியுள்ள ஏதாவதொரு பிளாஸ்டிக், PET அல்லது கண்ணாடி போத்தல்.
போத்தலை, குறிப்பாக மூடியை அல்லது காற்றழுத்த விசையை, நன்றாகக் கழுவி, அலசி, காய வைக்கவேண்டும். பிறகு, போத்தலில் ஏதேனும் லேபிள் இருந்தால், அதனை அகற்றிவிடவேண்டும்.
நீங்கள் குறைந்தது 100மி.லி. அளவிலான 5 சுத்தமான போத்தல்கள் வரை கொண்டு வரலாம்.

நாம் அனைவரும் சுற்றுப்புற விழிப்புணர்வுடன் இருப்பதை ஊக்குவிப்பதற்காக, அனைவரும் தங்களது சொந்த போத்தல்களை மறுபயனீடு செய்வார்கள் என நம்புகிறோம். தாதுநீர் போத்தல்கள் அல்லது ஷாம்பூ போத்தல்கள் போன்ற எந்த வகையான போத்தல்களையும் பயன்படுத்தலாம்.

உங்கள் குடும்பத்தினர், நண்பர்கள் அல்லது அண்டைவீட்டார்களிடம் கூடுதல் போத்தல்கள் இருக்கிறதா என நீங்கள் கேட்டுப் பார்க்கலாம்.

பெற்றுக்கொள்ளுதல்

கூட்ட நெரிசலைத் தவிர்ப்பதற்காக, நீங்கள் பெற்றுக்கொள்ள வேண்டிய நாளுக்கான வண்ணக்குறியீடு உங்கள் துண்டுப்பிரசுரத்தில் இருக்கும்.

நீங்கள் 2020 மார்ச் 30 முதல் ஏப்ரல் 5 வரை பங்குபெறும் கெபிட்டாலாண்ட் கடைத்தொகுதியிலும் பெற்றுக்கொள்ளலாம்.

மற்றவர்களது சார்பில் பெற்றுக்கொள்ள, அவர்களது துண்டுப்பிரசுரங்களைக் கொண்டு வரவும். ஒவ்வொரு துண்டுப்பிரசுரத்திற்கும் 500மி.லி. கை சுத்திகரிப்பானை நீங்கள் பெறலாம்.

உங்களுக்கு ஏதேனும் உதவி தேவைப்பட்டால், 1800 738 2000 என்ற தொலைபேசி எண்ணை அழைக்கவும் (16 மார்ச் – 5 ஏப்ரல் 2020)

சிங்கப்பூரிலுள்ள ஒவ்வொரு வீட்டிற்கும் 500மி.லி. கொடுக்கும் அளவுக்கு எங்களிடம் போதிய இருப்பு உள்ளது.

கை சுத்திகரிப்பானைப் பெற்றுக்கொள்வதற்கான விவரங்களும் மற்ற முக்கிய விவரங்களும் கொண்ட துண்டுப்பிரசுரம் எல்லா வீடுகளுக்கும் கிடைக்கும்.

கை சுத்திகரிப்பானைப் பெற்றுக்கொள்ள, நீங்கள் துண்டுப்பிரசுரத்தையும், சுத்தமான போத்தலையும் கொண்டு சென்றால் போதும்.

உங்கள் போத்தலை நிரப்புவதற்குமுன், அதில் ஓர் அடையாள முத்திரையை ஒட்டுவோம்.
ஒவ்வொரு வீட்டிற்கும் அனுப்பி வைக்கப்படும் துண்டுப்பிரசுரத்தைக் கொடுத்து 500மி.லி. கை சுத்திகரிப்பான் வரை பெறலாம்.

#BYOBclean திட்டம், சிங்கப்பூர்வாழ் மக்கள் பாதுகாப்பாகவும் ஆரோக்கியமாகவும் இருப்பதற்கு உதவியாக, ஒவ்வொரு குடும்பத்திற்கும் 500மி.லி. வரையிலான கை சுத்திகரிப்பானை இலவசமாக வழங்குகிறது.

இலவசக் கை சுத்திகரிப்பான் விற்பனைக்கு அல்லது மறுவிற்பனைக்கு அல்ல.

ஒரு சிறிய குடும்பத்திற்கு (4 பேர்) 500 மில்லிலிட்டர் கை சுத்திகரிப்பான் சுமார் ஒரு மாதத்திற்கு நீடிக்கும்.

பொதுவானவை

நெருக்கடிநிலைகளுக்குத் தயார்ப்படுத்தவும், சிங்கப்பூர் மக்களின் மீள்திறனை வளர்க்கவும் தெமாசெக் அறநிறுவனம் நடத்திவரும் Stay Prepared திட்டத்தின் ஒரு பகுதியாக #BYOBclean முனைப்பு இடம்பெறுகிறது.

சிங்கப்பூரில் வாழும் மக்கள், குறிப்பாக முன்னிலையில் பணி புரிபவர்கள், இந்த இக்கட்டான காலகட்டத்தில் தயார்நிலையில் இருப்பதை உறுதிப்படுத்த, தெமாசெக் அறநிறுவனம் அதன் பங்களிப்பாளர்களுடன் இணைந்து செயல்பட்டு, பொதுமக்களுக்கு இலவச கை சுத்திகரிப்பானை வழங்குகிறது.

கை சுத்திகரிப்பான் உங்களுக்குத் தேவையில்லை என்றால், அது அதிகமாகத் தேவைப்படக்கூடிய நண்பருக்கு அல்லது அண்டைவீட்டாருக்கு உங்கள் துண்டுப்பிரசுரத்தை நீங்கள் கொடுக்கலாம்.

பெற்றுக்கொள்ளும் நிலையங்களில் கூட்டம் சமாளிக்கக்கூடிய அளவில் இருப்பதையும் அதிக கூட்ட நெரிசல் தவிர்க்கப்படுவதையும் உறுதிப்படுத்தும் வகையில் கால அட்டவணை திட்டமிடப்பட்டுள்ளது.

கை சுத்திகரிப்பானைப் பெற்றுக்கொள்ளும் நிலையங்களில் சமூகத்திலிருந்து தள்ளியிருக்கும் நடைமுறையும் நடப்பிலிருக்கும்.

உங்களுக்கு உடல்நலமில்லாவிட்டால், தயவுசெய்து வீட்டில் ஓய்வெடுக்கவும்.

உங்களுக்கு ஏதேனும் உதவி தேவைப்பட்டால், 2020 மார்ச் 16 முதல் ஏப்ரல் 5 வரை 1800 738 2000 என்ற எண்ணில் #BYOBClean நேரடித் தொலைபேசி சேவையை அழைக்கலாம்.
(தொலைபேசி சேவை செயல்படும் நேரம்: காலை 9 மணி – இரவு 9 மணி)